பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை211

“வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால்
 அஞ்சி ஒதுங்காதார் யாவர்? அவர் - மங்சுசூழ்
 வான்தோய் புரிசைப் பொறியும் அடங்கினவால்,
 ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு. ”

- பெரும் பொருள் விளக்கம்

(மற்று, அசை)

7.   நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் = எயிற் புறத்து நீர் நிலையில் (அகற்ற ஒழியாது வந்து விரவும் பாசிபோல) இருதிறப்படையும் தளர்ந்தகலாமல் மேன்மேல் விரும்பிக் கலந்து மலையும் பாசித்துறையும்;

(விட்டு விலகாது விரைந்து விரவும் நீர்ப்பாசி போலக், கலந் திருபடையும் மலைந் திருதலையும் அலையென மோதும் அமரின் பரிசு, பாசி எனப்பட்டது. )

“முடிமனர் எழுதரு பரிதி மொய்களி
 றுடைதிரை மரக்கலம் ஒளிறு வாட்படை
 அடுதிறல் எறிசுறா வாகக் காய்ந்தன
 கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே. ”

- சிந்தாமணி. 2223

8.   அதாஅன்று = அதுவுமன்றி; ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் = அரணகத்து ஊரில் அமர் விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப் போரின் தறுகண்வையும் :

(மற்று, அசை. அதன் மறன் என்பது அண்மைச் சுட்டாய் மேற்பாசி மறனைச் சுட்டும். )

“மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
 பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார் - எறிதொறும்போய்
 நீர்ச்செறி பாசிபோல் நீங்காது தங்கோமான்
 ஊர்ச்செரு உற்றாரைக் கண்டு. ”

- பழம்பாட்டு

9.   மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் = மதின்மேல் ஏறி அகற்றப்படாது ஊன்றிய மறவர் பரிசும்;