பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை223

எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்
தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே, குடைதுளங் கினவே,
உரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே,
பன்னூ றடுக்கிய வேறுபடு பஞிலம்
இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றா லமரே, பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே,
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னோரு மாற்ற
அரும்பெற லுலகம் நிறைய
விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே. ”

- புறம். 62.

11.   செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் = போர்க்களத்தில் தன் வேந்தன் பட்டுவிழ வெகுண்டு அவன் படை மறவன் ஒருவன் அவனை வீழ்த்தியவரை அடர்த்தழிக்கும் தூய புகழ்ப் பரிசும்;

“மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபின்
அருமறை ஆசான் ஒருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொடு
இரவூர் அறியாது துவரை வேந்தொடு
மாதுலன் தன்னை வாயிலின் நிறீஇக்
காவல் பூட்டி ஊர்ப்புறக் காவயின்
ஐவகை வேந்தரோடு அரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத்
துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி
வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரும் ஐம்பான் மருகரும்
உடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்