பக்கம் எண் :

224நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

தன்முதற் றாதையொடு கோன்முத லமரர்
வியந்தனர் நயந்த விசும்பி
னகன்றலை யுலகமு மறிந்ததா லதுவே. ”

- பெருந்தேவனார் பாரதப் பாட்டு.

12.   பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும், உளப்பட = பலவேறாய பகைப் படையனைத்தும் ஒருவனுக்குடைந்து கெட்டழிந்தவிடத்து அவ்வாறு வென்றவன் வீறுகொண்டு புகழ்க்குரிய தன் வெற்றிவாளை வீசிக் கொன்றுகுவிக்கும் நூழில் என்னும் துறையும், கூட்ட;  [ ஒருவன் பலரைக் கொன்று குவிக்கும் தறுகண்மை நூழில் எனவும், நூழிலாட்டு எனவும் பெயர் பெறும். அது குவிதலையும் கொல்லுதலையும் குறிக்கும் சொல்லாகும். ]

“ஒருவனை யொருவ னடுதலும் தொலைதலும்
 புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை
 இன்றி னூங்கோ கேளலம்; திரளரை
 மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்
 நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து
 செறியத் தொடுத்த தேம்பாய்க் கண்ணி
 ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப்
 பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக
 நாடுகெழு திருவிற் பெரும்பூட் செழியன்
 பீடுஞ் செம்மலும் அறியார் கூடிப்
 பொருது மென்று தன்றலை வந்த
 புனைகழ லெழுவர் நல்வல மடங்க
 ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. ”

- புறம். 76.

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே = பொருந்தி விளங்கும் பன்னிரண்டு துறைகளையுடையது தும்பைத் திணை.  [ ஈற்றேகாரம் அசை. உம்மைகள் எண் குறிப்பன. பொருட்டொடர்பால் தும்பைத்திணை என்னும் எழுவாய் பெறப்பட்டது.  ] 

சூத்திரம் : 18 
 வாகை தானே பாலையது புறனே.