| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 225 |
கருத்து : இது, வாகைத்திணை பாலை என்னுமகத் திணைக்குப் புறனாமென வுணர்த்துகிறது. பொருள் : வெளிப்படை. குறிப்பு : ஏகாரம், முன்னது பிரிநிலை; ஈற்றது அசை. பாலை அறக்காதலை வளர்த்து மீட்டும் இன்பத்தை மிகுப்பது போல, வாகை மறக்காதலை வளர்த்து வெற்றியின்பம் விளைப்பதாலும், பாலைபோல வாகையும் நிலம் வரைவின்றி யாண்டும் நிகழுமாகலானும், பாலைக்கு வாகை புறனாயிற்று. | சூத்திரம் : 19 | | | | தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. |
கருத்து : இது, வாகைத்திணை இயல் விளக்குகிறது. பொருள் : தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை = குற்றமற்ற கோட்பாட்டளவில் மக்கள் அவரவர்துறையில்; பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப = வகைபட விஞ்சும் விறலை வாகை என்பர் புறநூற்புலவர். குறிப்பு : இங்கு ‘வாகைச்’சொல் கொண்ட பொருட் டொடர்பாலும், ‘புறநூற்புலவர்’ எனும் எழுவாய் அவாய் நிலையானும் கொள்ளப்பட்டன. இழிவொடு பழிபடு மெல்லாத்துறையும் வெறுத்து விலக்க வேண்டுமாதலின், அவற்றை நீக்கத் ‘தாவில் கொள்கை’ என்றடை கொடுத்துப், புரைதீர் திறலெதுவும் வாகைக் குரித்தென வரையறுத்துத் தெளித்த செவ்வி வியத்தற்குரியது. அவரவர் துறையில் பிறருடனுறழ்ந்து மேம்படு வெற்றி பெறுதல் ‘வாகை’ எனப்படும். உறழ்பவரின்றி ஒருதுறையில் ஒப்பற்றுயரும் பரிசும் வாகையேயாகும்; மேம்பட்டு வீறு பெறுதலே வாகையாகலின், அதற்கு உறழ்ச்சி (போட்டி) இன்றியமையாததன்று. இசைபடப் புகழும் பாடாணின் வேறாய், |