பக்கம் எண் :

226நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

உறழ்வாரை வென்றுயரும் வீறும் எதிர்ப்பின்றி ஒருதுறையில் மேம்படும் விறலும் ஒப்ப வாகைவகையி லடங்கும்.

செய்யுள்: (1) ‘ஒருவளை ஒருவன் அடுதலும் தொலைதலும்’ எனும் இடைக்குன்றார் கிழார் புறப்பாட்டிறுதியடிகள், ஒத்தாரோ டுறழ்ந்துவென்ற வாகை குறிப்பதறிக.

“இன்றினூங்கோ கேளலம்
 . . . . . . . . . . . ’
 நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
 பீடும் செம்மலு மறியார் கூடிப்
 பொருது மென்று தன்றலை வந்த
 புனைகழ லெழுவர் நல்வல மடங்க
 ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. ”

- புறம். 76

இன்னும் ‘சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்’ எனும் கோவூர் கிழார் பாட்டினிறுதியில்,

“விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்
 குணகடல் பின்ன தாகக் குடகடல்
 வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப
 வலமுறை வருதலும் உண்டென் றலமந்து
 துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே”

- புறம். 31

எனவருவது, எதிர்ப்பாரின்றி உலகறிய வுயர்ந்த தறுகண் வீறு கூறும் வாகையாதல் காண்க.

சூத்திரம் : 20 
 அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி னாற்றிய அறிவன் தேயமும்,
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்,
பாலறி மரபிற் பொருநர் கண்ணும்,
அனைநிலை வகையோ டாங்கெழு வகையில்,
தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்.