| 230 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இப்பழந் தமிழ் மரபுகள் கருதாமல், முன் உரைகாரர் இங்கு முதன்மூன்றடிகளும் வடநூல் கூறும் வருணவேறுபாடுகளை அவரவர்க் கறுதியிட்டு வகுத்த தொழிற்றொகுதியுடன் இங்குக் குறிப்பன போலக்கொண்டு பொருந்தாப் பொருள் கூறி யிடர்ப்படுவர். தொல்காப்பியரின் துணிந்த நோக்கும், சூத்திரச் சொற்றொடர்ப் போக்கும் தெற்றெனத் தெளிக்கும் செம்பொருளைச் சிந்தியாமல், பழங்கால வழக்குகளையறியாததால் தாமறிந்த தங்காலப் பிறநூற் கொள்கைகளை அறப்பழந் தமிழ்நூலுட் புகுத்த முயன்றவர் மயங்கலாயினர். இங்கு வருண கரும வரையறை விளக்குவது கருத்தாமேல், அதைத் தெளிக்கும் சொற்பெய்தல் எளிதாகும்; அதற்கு மாறாகத் தொழிற் சுட்டொழித்துக், குடிசுட்டும் ‘மரபு’ச் சொற்பெய்தமைத்த சிறப்பின் குறிப்புச் சிந்திக்கற்பாற்று. “அறுதொழிலுடைய பார்ப்பனர் பக்கமும், ஐவகைத் தொழிலுடை யரசர் பக்கமும், இருமூன்று தொழிலுடை ஏனோர் பக்கமும்” என ஏற்ற தொழில்சொற்கூற்றல் விளக்கும் ஆற்றலின்றி இயைபினை மறந்து வேற்றுப்பொருள் விளக்கும் மரபுச் சொற்பெய்தனரென்று கூற யாரும் துணியார். இன்னும், இங்கு வருணவகை விளக்குவதே கருத்தாயின், உரிமையுடைய இருபிறப்பாளர் மூவரையு முறையே கூறிப், பிறகு அவர்க்குரிய அடிமைகளாய் உரிமையற்ற நான்காம் வருணத்தாரையும் வரிசைமுறையே வகுத்துக்கூறுவர். அதை விட்டுப் பார்ப்பாரையும் ஆளும் வேந்தரையும் மட்டும் சுட்டி, வைசியரையும் ஆளாக்கத்திரியரையும் அறவே விட்டு, அந்தணரும் அரசரும் அல்லார் எல்லாரையும் சூத்திரருடன் சேர்த்து ஓராங்கெண்ணி ஒருவகுப்பாக்கி ஒத்த வாகைத் தொழிலுடைய “ஏனோர்” எனத் தொகுத்துச் சுட்டியதொன்றே வருண தரும வகையெதுவும் கருதுங் குறிப்பிங்கின்மையினை வலியுறுத்தும். அன்றியும், தமிழகத்தில் நான்கு வருணம் என்று மின்மை யாவருமறிந்த உண்மை. தமிழரொடு கலவாத் தருக்குடைய பார்ப்பார் தமிழருள் சத்திரியர் வைசியரென யாரையும் தழுவினதில்லை. உணவும் மணமும் ஓத்தும் வேள்வியும் முப்புரிச் சடங்கும் இருபிறப் பெய்தலும் இன்னபிறவும்தம்மரபினர்க்கு ஒத்த உரிமையைத் தமிழருள் யார்க்கும் பார்ப்பார் தாரார். இல்லாக் கற்பகம் பொல்லா |