| 232 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
தாபதவழக்கு நாலிரண்டாதலு மக்கால வழக்கு. தாபதர் = தவம் செய்வார்; [ தவம் = உற்ற நோய் நோற்றல். (நோற்றல் = பொறுத்தல்), உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலிலிருத்தல், நீரில் நிற்றல், காமங் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போலத் திண்ணியோருள்ளங் கண்ணியவகையின. ] “அனை நிலைவகைய” என்பதில், “அனைய” எனுஞ்சொல் செய்யுளோசை நோக்கி “அனை” எனக் குறுகிற்று. அவ்வகைப்பிற வாகைக்குரியவை ஆடல், பாடல், ஓவியமெழுதுதல் போல்வன. தேரும் குதிரையும் யானையு மூரும் திறல்வகை யெல்லாம் இதனுள் அடங்கும். இவை வாகைவகைகளே. வாகைத்துறைகளை அடுத்த சூத்திரம் கூறும். | சூத்திரம் : 21 | | | | கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய மரபினு மேரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையு மொன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானு மரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமு மொல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானு மொல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமுங் கட்டி னீத்த பாலி னானு மெட்டுவகை நுதலிய வவையத் தானுங் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானு மிடையில் வண்புகழ்க் கொடைமை யானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானு மருளொடு புணர்ந்த வகற்சி யானுங் காம நீத்த பாலி னானுமென் றிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே. |
|