| 234 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நக்கீரரின் இப்பழம் பாட்டடிகளில் ‘வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி’ என்பது முதல் பாசறையில் கூதிரின் பரிசு கூறப்படுவ தறிந்தின்புறுக. ‘மலைமிசை நிலைஇய’ எனும் மதுரை எழுத்தாளன் அகப்பாட்டும் ‘மூதில் வாய்த் தங்கிய’ எனும் பெரும் பொருள் விளக்க வெண்பாவும் இத்துறைச் செய்யுட்களாகும். இனி, வேனிற் பாசறைக்குச் செய்யுள்: “பெரும் பெயல் பொழிந்த சிறுபுன்மாலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந் தித்தும், ஒருகை பள்ளி யொற்றி, யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி, நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி, யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ ளஞ்செவி நிறைய வாலின . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. ” - முல்லைப்பாட்டு - வரி 6; 71 - 89; 100 முதல் இறுதிவரை. ) நப்பூதனார் இம்முல்லைப் பாட்டடிகளில் வினைமேற் சென்ற தலைவன் மீளற்குரிய காருக்குமுன் போரைவிரும்பிக் |