பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை235

காதலைவென்று களத்துத்தங்கும் வேனிற் பாசறைப் பரிசு விளக்குதல் கண்டு மகிழ்க.

(2) ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் = களமர் களத்தில் நெற்போரடித்தல் முதலிய விழவார்ப்போடு, போர்க்களத்தில் தேர் மறவர் வெற்றிவிழவின் வீறும்;

ஏரோர் களவழிக்குச் செய்யுள் :

“குடிநிறை வல்சிச் செஞ்சா லுழவர்
 நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
 பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சில்
 உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றித்
 தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை
 அரிபுகு பொழுதி னிரியல் போகி
 வண்ணக் கடம்பின் நறுமல ரன்ன
 வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
 கறையணற் குறும்பூழ் கட்சி சேக்கும். ”

- பெரும்பாண். வரி 197 - 205

இனித்தேரோர் களவழிக்குச் செய்யுள்: (1)

“உருவக் கடுந்தேர் முடுக்கிமற் றத்தேர்ப்
 பருதிசுமந் தெழுந்த யானை - இருவிசும்பிற்
 செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
 புல்லாரை யட்ட களத்து.

- களவழி. 4

‘எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
 என்றனி ராயின், ஆறுசெல் வம்பலிர்!
 மன்பதை பெயர, அரசுகளத் தொழியக்
 கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை
 மீபிணத் துருண்ட தேயா வாழியிற்
 பண்ணமை தேரு மாவு மாக்களும்
 எண்ணற் கருமையின் எண்ணின்றோ விலனே;
 கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
 உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்
 சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர்