பக்கம் எண் :

236நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஆபரந் தன்ன செலவிற்பல்
யானை காண்ப லவன்தானை யானே.

- பதிற்று. செய். 77

(3)  தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும் = தேர்மறவரை வென்றழித்த குரிசிலின் தேர்முன் அவர்படை மறவர் களித்தாடுங் குரவைக் கூத்தும்.

செய்யுள்: (1)

“கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக
 வாளழி வாங்கி அதரி திரித்த
 வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தி,
 . . . . . . . . . . . . . . . .
 தேரூர் செருவும் பாடிப் பேரிசை
 முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி. ”

- சிலப்பதிகாரம் - கால்கோட்காதை வரி 232 - 234; 239 - 240.

(4) ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும் = அதனொடு பொருந்து முறையானே, வென்ற குரிசில் சென்ற தேரின்பின் அவன் தானை மறவரும் ஏனை விறலியரும் அவன் புகழ்பாடி வாழ்த்தியாடும் குரவைக் கூத்தும்: (இனி, தேர்ப்பின் களத்துப் பிணக்கூழுண்ணும் பேய்களாடுங் குரவை எனினும் அமையும். )

செய்யுள்:

“வென்று களங்கொண்ட வேந்தன்தேர் சென்றதற்பின்
 கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப
 உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
 கொண்டாடின குரவைக் கூத்து. ”

- பெரும்பொருள் விளக்கம்

“பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை”

- சிலப்பதிகாரம் - கால்கோட்காதை வரி 241

என்பதுமது.

(5) பெரும்பகை தாங்கும் வேலினானும் = தனதிற் பெரிய பகைப்படையைத் தடுக்கும் வேல் வென்றியும்.