| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 237 |
[ பகை என்பது பகைப்படைக்கு ஆகுபெயர். தாங்குதல் = தடுத்தல், ] செய்யுள்: “பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே; இரும்புற நீரு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன்குர லிரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினும் செல்லும்ஆங்; கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே. ” புறம். 332 (6) அரும் பகை தாங்கும் ஆற்றலானும் = தடுத்தற்கரிய மாற்றலர் தானை மடங்கத் தடுக்கும் திறலும். [ இதிலும், “புகை”, பகைப்படைக்கு ஆகுபெயர். ] “வணங்கு தொடைப்பொலிந்த வலிகெழு நோன்றாள் அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந தளைச்செறி யுழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து, “விழுமியம், பெரியம் யாமே, நம்மிற் பொருநனு மிளையன், கொண்டியும் பெரிதென” எள்ளி வந்த வம்ப மள்ளர், புல்லென் கண்ணர் புறத்திற் பெயர, ஈண்டவர் அடுதலு மொல்லான்; ஆண்டவர் மாணிழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம்மூ ராங்கட் டெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே. ” -புறம். 78 [ இடைக் குன்றூர் கிழாரின் இப்புறப்பாட்டு நெடுஞ்செழியன், தன்னை மதியாமல் தன் இளமை இகழ்ந்து மேல் வந்த அரும்பகை தாங்கி வென்ற ஆற்றலை விளக்குகிறது. |