பக்கம் எண் :

238நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

மேல்ஐந்தாவதும் இதுவும் ஒரு குரிசிலின் தறுகண்மைத் திறலே குறிப்பினும், முன்னது வேல் விறலை விதந்துகூறப், பின்னது போர்த்திறனும் பெருவலியும் பேசுகிறது.  ] 

(7)  புல்லா வாழ்க்கைவல்லாண் பக்கமும் = சிறந்து பொருந்தாச் சிறிய வாழ்வினினும் வண்மை குன்றா வேளாண்மையும்.

“இடனில் பருவத்தும் ஒப்புரவுக் கொல்கார்
 கடனறி காட்சி யவர்’ . . . . . ”

ஆதலின், வறுமைக் கஞ்சாத் தறுகணரூக்கம் வாகைக் குரித்தாயிற்று.

செய்யுள்:

“எருது காலுறா திளைஞர் கொன்ற
 சில்விளை வரகின் புல்லென் குப்பை
 தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில
 பசித்த பாண ருண்டுகடை தப்பலின்
 ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச்
 சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
 வரகுகட னிரக்கு நெடுந்தகை
 அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே”

- புறம். 327

இனி, இதற்கு ‘வாழ்க்கையை விரும்பாது, வான் விரும்பிப் போர் மகிழும் வல்லாண்மையும்’ எனப்பொருள் கூறினும் பொருந்தும், அதற்குச் செய்யுள் வருமாறு :

“கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து
 மலிபுகழ் வேண்டு மனத்தர் - ஒலிகடல்சூழ்
 மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார்
 புண்ணியமாம் போர்க்களத்துப் போந்து. ”

- பாரதவெண்பா

(8)  ஒல்லார் நாணப் பெரியவர்க்கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் = பகைவரும் நாணுமாறு தம் தலைவரைக் குறித்து முன் சொன்ன வஞ்சின வுரையொடு வாய்ப்ப