பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை239

அமைத்துப், பழந்தொடர்புடைய (படையா) உயிரைக் களப்பலியாக வழங்கும் மறவேள்வியும்.

செய்யுள் : 1

“குழாக்க ளிற்றரசர் குறித்தெழு கொலைக்களம்
 விழாக்களம் போல மெய்ம்மலி யுவகை
 ஆண்மை யுள்ளம் கேண்மையிற் றுரத்தலின்
 அழுந்து படப்புல்லி விழுந்து களம்படுநரும்,
 . . . . . . . . . . . . . . . . .
 பிறப்பும் பெருமையும் சிறப்பும் செய்கையும்
 அரசறி பெயரும் உரைசெய லாண்மையும்
 உடையோ ராகிய படைகோண் மாக்கள் . . .
 சென்று புகுமுலக மொன்றே யாகலின் . . . . .
 ஒன்றுபடு மனத்தொடு கொன்றுகொன் றுவப்பச்
 செஞ்சோற்று விலையும் தீர்ந்து, தம்மனைவியர்
 தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும்
 புதுவது புனைந்த மகளிர்க்கு
 வதுமை சூட்டிய வான்படர்ந் தனரே. ”

- பழையபாட்டு, புறத்திரட்டு. 1354

செய்யுள் : 2

“இழைத்த திகவாமற் சாவாரை யாரே
 பிழைத்த தொறுக் கிற்பவர்?”

- குறள். 779

(9) “ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் = பகைவரை இடம் வாய்ப்புழி அன்பாற் றழுவிக் கொள்ளும் பெருந் தகவும்;

செய்யுள் : (1)

“பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
 றகைமைக்கட் டங்கிற் றுலகு. ”

- குறள் 874

செய்யுள்: (2)

“அறத்திற்கே அன்பு சார்பென்ப வறியார்;
 மறத்திற்கு மஃதே துணை. ”

- குறள் 76