பக்கம் எண் :

240நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இனி, இதற்குப் “பகைவர் நிலங் கைப்பற்றியாளும் திறலும், ” எனப் பொருள் கூறுவர் இளம்பூரணர். அப்பொருளில் இத்துறைக்குச் செய்யுள்:

“நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
 பனிவார் சிமையக் கானம் போகி
 அகநாடு புக்கவர் அருப்பம் வௌவி
 யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து
 மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில்”

- மதுரைக் காஞ்சிவரி. 147 - 151

குறிப்பு : இவ் வொன்பதும் மறத்துறையில் வாகைக்குரியன. இனி வரும் ஒன்பதும் அறத்துறையில் வாகைக் குரியவாகும்.

(10)  பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் = எருதானும் பசுவானும் குற்றமற்ற சீர்மிகு சால்புடையார் பெருமையும்;

 [ பகட்டால் சிறப்புடைச் சான்றோராவார், கோழைபடா மேழிச் செல்வராய வேளாண் மாந்தர்; ஆவாற் சிறப்புறுவார் ஆயர், அதாவது கோவலர். ஆவினானும் எனக் கொள்ளாமல், மாவினானும் எனப்பிரித்து, யானை குதிரையாகிய மாவினானும் என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மறத்துறைக்குப் பொருந்துமல்லாமல், அவரே கூறுகிறபடி முன் ஒன்பதுமட்டும் மறவகையாக இது முதல் பின் வரும் ஒன்பதும் அறவகை வாகைத்துறைகளாதலின், அவ்வரிசையில் முதலாகுமிது அறத்துறைப் பொருளோ டமையாமை தெளிவு.  ] 

(1)  பகட்டினாற் சிறப்புடைச் சான்றோர் பெருமைக்குச்

செய்யுள்: (1)

“யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார்
 ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் யானைப்
 படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே
 ருடையோர்க் கரசரோ வொப்பு?”

- பெரும்பொருள் விளக்கம்

(2) ஆவினாற் சிறப்புடைச்சான்றோர் பெருமைக்குச் செய்யுள்