பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை241

“. . . . . . . . . . . . . . . மறிய
குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
அதளோன் துஞ்சும் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின்
நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகி ழன்ன கூம்புமுகை
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி புஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மகள்
அளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉ
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்”.

- பெரும்பாண். வரி : 147 - 168

“ஆகாத் தோம்பி யாப்பய னளிக்கும்
 கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை”

- சிலம்பு- அடைக்கலக். வரி. 120 - 121

எனும் சிலப்பதிகார அடிகளும் இத் துறையாம்.

(11)   கட்டில் நீத்த பாலினானும் = அரசுகட்டிலை இகழ்ந்து துறக்கும் உரவோர் பரிசும்;

செய்யுள் :

“பரிதி சூழ்ந்தவிப் பெயங்கெழு மாநிலம்
 ஒருபக லெழுவர் எய்தி யற்றே.
 வையமும் தவமும் தூக்கிற் றவத்துக்
 கையவி யனைத்தும் ஆற்றா தாகலின்
 கைவிட் டனரே காதலர்; அதனால்