பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை243

(13)  கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் = வரையறுத்த ஒழுக்கங்கருதும் உரனும்;

குறிப்பு : கண்ணுமை, கண்ணுதல் அடியாகப் பிறந்த பண்புப் பெயர்; (கண்ணுதல் = கருதல்) ஆளுதல் ஆண்மை எனவும், புகழ்தல் புகழ்மை எனவும் வருதல் போன்றது. விருப்பைவென்று அறிவாற் புலனைக் கட்டுப்படுத்துவதே ஒழுக்கமாதலின், “கட்டமை ஒழுக்க” மெனப்பட்டது. அது வாகையாதல், “ஐந்தடக்கலாற்றின்”, “ஐந்தவித்தானாற்றல்” எனப் புலனடக்குதல் அரிய திறலாகக் கூறப்படுதலானறியலாம்.  [ இனி, “கட்டமை” என்பதற்கு ‘அறநூல் விதித்த’ எனப்பொருள்கூறித், தரும சாத்திரங்களுக்குச் சார்வபௌம ஆதிக்கமளிப்பர் சிலர்; தரும நூல்கள் மக்களுக்குத் தம்முள் மாறுபட விதிப்பனவாதலானும், அவற்றை எழுதியோ ராணைக்கு உளச்சான்றுக்கு எதிராக எல்லாரும் கட்டுப்படுதல் இயல்பன்றாதலானும், ஒருகால் அவ்வகைக் கட்டுப்பாடு வற்புறுத்தப்படுமேல் அது வாகையாகா மையானும், அது பொருளன்மையறிக.  ] 

செய்யுள்: (1)

“ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
 இந்திரனே சாலுங் கரி. ”

- குறள். 25

செய்யுள்: (2)

“பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார். ”

- குறள். 6

(14)  இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் = இடையறவின்றி வள்ளிய புகழை வளர்க்கும் கொடையும்.

செய்யுள்: (1)

“ஒருநாட் செல்லலம், இருநாட் செல்லலம்,
 பலநாட் பயின்று பலரொடு செல்லினும்
 தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ,
 அணிபூ ணணிந்த யானை யியறே