பக்கம் எண் :

244நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ரதியமான்; பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்,
கையகத் ததுவே, பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்கவவன் தாளே. ”

- புறம். 101

செய்யுள் : (2)

“கடந்தடு தானை மூவிரும் கூடி
 உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே
 முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்
 யாமும் பாரியு முளமே
 குன்று முண்டுநீர் பாடினிர் செலினே. ”

- புறம். 110

செய்யுள்: (3)

“ஈயென இரத்த லிழிந்தன்று, அதனெதிர்
 ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று,
 கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று, அதனெதிர்
 கொள்ளே னென்றல் அதனினு முயர்ந்தன்று,
 தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
 உண்ணா ராகுப நீர்வேட் டோரே;
 ஆவு மாவுஞ் சென்றுணக் கலக்கிச்
 சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும்,
 உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்
 புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
 உள்ளிச் சென்றோர்ப் பழியலர், அதனாற்
 புலவேன், வாழியர் ஓரி! விசும்பின்
 கருவி வானம் போல
 வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே”

புறம். 204

(15)  பிழைத்தோர்த் தாங்குங் காவலானும் = தவறிழைத்தோரைப் பொறுக்கும் ஏமமும்;