| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 245 |
செய்யுள்: (1) “நிலமிசை வாழ்நர் அலமரல் தீர” எனத் தொடங்கும் தாமப்பல்கண்ணனார் புறப்பாட்டில் கீழ்வருமடிகள் இத்துறை குறிக்கும். “நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவா யென்னினும், நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே, தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்ப! காட்டினை, ஆகலின், யானே பிழைத்தனென்; சிறக்க நின்னாயுள், மிக்கவரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே”. - புறம். 43 செய்யுள்: (2) “கருத்தாற்றித் தம்மைக் கூடிய செய்தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்; ஒறுத்தாற்றின் வானோங் குயர்வரை வெற்ப பயமின்றே தானோன் றிடவருஞ் சால்பு. ” (பழமொழி 19) செய்யுள்: (3) “மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியால் வென்று விடல்”. - குறள். 158 (இதில், மிகுதி = செருக்கு; தகுதி = பொறுமை; மிக்கவை = தவறுகள். ) (16) பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் = மெய்ப் பொருள் பற்றிய உள்ளப்பரிசும்; |