| 246 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
செய்யுள்: “முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனின் றவர். ” திரிகடுகம். 35 இனி, (1) “ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. ” - குறள். 354 | 2. | “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. ” | | | - (குறள். 356) |
எனவரும் வள்ளுவர் குறள்களு மித்துறையாகும். (17) அருளொடு புணர்ந்த அகற்சியானும் = யார்மாட்டும் விரிந்து பெருகும் அருளொடு கூடிய துறவும். குறிப்பு : கடனாற்றும் முயற்சிக்கஞ்சித் தனக்கொழிவு தேடும் போலித்துறவை விலக்கி, சுரந்து எல்லார்மாட்டும் பரந்து பயன்தரும் அகன்ற அன்பாற் பிறர்க்கென முயலும் மெய்த்துறவின் வீறே ஈண்டுக் கூறக் கருதலின், வாளா அகற்சி என்னாது “அருளொடு புணர்ந்த” என்றடையொடு தொடர்ந்து சுட்டப்பட்டது. செய்யுள்: (1) “மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. ” - குறள். 244 செய்யுள்: (2) “உண்டா லம்ம இவ்வுலகம்; இந்திர ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத் |