| 248 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
குறிப்பு : பதினெட்டுத் துறைத்தே என்னாது, “இருபாற்பட்ட ஒன்பதிற்றுத்துறைத்தே” என்றார்; மேற்கூறியாங்கு முன் மறவகையிலொன்பதும் பின் அறவகையிலொன்பதுமாக வாகைத்திணை துறைகொள்ளும் எனற்கு. இனி, இத்திணைத்துறை பதினெட்டும் தன்மையால் இரு வேறு வகைப்படுதலின் அவற்றை ஒருசேர எண்ணுதலமையாதாதலின், “இருபாற்பட்ட” எனவும், வகைக்கு ஒன்பதேயாதல் குறிக்க “ஒன்பதிற் றுத்துறைத்து” எனவும் விளக்கினார் இந்நூலார். இதில் வரும் இன்னும் ஆனும் உரையசைகள்; பாங்கு பக்கம் என்பன இசை நிரப்பு; ஈற்றேகாரம் அசை. | சூத்திரம் : 22 | | | | காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. |
கருத்து : இது, அகப் பெருந்திணைக்குக் காஞ்சித் திணை புறனா மென்பது சுட்டுகிறது. பொருள் : இதன் பொருள் வெளிப்படை. குறிப்பு : ஏகார மிரண்டில், முன்னது பிரிநிலை; மற்றது ஈற்றசை. பொறியவிக்கும் உரனின்றி இன்பம் விழைந்து மேவன செய்வார் காமவகை பெருந்திணையாவது போல, முயற்சி மேற்கொள்ளும் உரனின்றி நிலையாமை சொல்லி நெஞ்சழிய மனமடிவதே காஞ்சியாவதானும், இவ்விரண்டுக்கும் இடம் பொழுதிரண்டும் வரையறை யின்மையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. | சூத்திரம் : 23 | | | | பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. |
கருத்து : இது, காஞ்சித்திணையின் இயல் விளக்குகிறது. பொருள் : பாங்கருஞ் சிறப்பின் = ஒப்பற்ற மறுமையின்பத்துக்கு; பல்லாற்றானும் = பலவழியானும்; நில்லா |