பக்கம் எண் :

250நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

 முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ,
ஈரைந் தாகு மென்ப; பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற
மாய்ந்த பூசல் மயக்கத் தானும்,
தாமே யேங்கிய தாங்கரும் பையுளும்,
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்,
நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும்,
கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,
காதலி யிழந்த தபுதார நிலையும்,
காதல னிழந்த தாபத நிலையும்,
நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச்
சொல்லிடை யிட்ட பாலை நிலையும்,
மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பயந்த
தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும்,
மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே.

கருத்து : இது, காஞ்சித்துறை விழுப்ப வகை பத்தும் விழும வகை பத்துமாக இருபதாமாறு கூறுகிறது.

பொருள் : (1)  மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் = யார்க்கும் விலக்கொணாது இறுதிதரும் கூற்றினாற்றல் கூறும் பெருங்காஞ்சியும்;

‘பல்சான்றீரே’ எனும் நரிவெரூஉத்தலையாரின் புறப்பாட்டில் பின்வரும் அடிகளில் மாற்றருங் கூற்றின் பெருமை சாற்றுதல் அறிக;

(1) “. . . . . . . . . . . . . . . . . . .
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ. ”
 - புறம். 195
(2)“உடற்றுப் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட்
டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக்