பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை251

குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே
கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர்”
 - சிந்தாமணி. 2620

2.   கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் = இளமைகழிந்த முதியோர், மற்றையவர்க்கு அப்பரிசு சுட்டியறிவுறுத்தும் முதுகாஞ்சியும்;

இதற்குப் பாட்டு :

“யாணர் வரவின் மேனா ளீங்கிவன்
 இளமைச் செவ்வி நயந்த பேதையர்
 காத லுண்கண் வருபனி நீங்கி
 இன்னுந் துயில்கொண் டிலவே. . . . . . ”

- ஆசிரியமாலை

3.   பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் = தகுதியொடுபட்ட பரிசு கருதி வாய்த்த புண்ணைக் கிழித்து உயிர் துறக்கும் மறக்காஞ்சியும்;

“பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
 கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச்
 சென்று களம்புக்க தானை தன்னொடு
 முன்மலைந்து மடிந்த வோடா விடலை
 நடுக னெடுநிலை நோக்கி, ஆங்குத்தன்
 புண்வாய் கிழித்தனன் புகழோன்; அந்நிலைச்
 சென்றுழிச் செல்க மாதோ, வெண்குடை
 யரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை
 முரண்கெழு தெவ்வர் காண
 விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே. ”

இதில், முன் ஒருவன் இறந்து கல்லான நிலையைப் போரில் புண்பட்ட ஒருவன்கண்டு, யாக்கை நிலையாமையை நினைத்துத், தன் புண்ணைக் கிழித்து உயிர் துறந்த தறுகண்மை கூறப்படுதல் அறிக.

4.   ஏமச் சுற்றமின்றிப் புண்ணோற் பேஎயோம்பிய பேஎய்ப் பக்கமும் = பேணும் சுற்றத்தா ரின்மையால் புண்பட்டவனைப் பேய்பேணும் பேய்க் காஞ்சியும்;