பக்கம் எண் :

252நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற்
 கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - உண்ணும்
 உளையோரி யுட்க வுணர்வொடுசா யாத
 விளையோன் கிடந்த விடத்து. ”

5.   இன்னனென் றிரங்கிய மன்னையானும் = இன்ன பரிசுடையா னென்று இறந்தபின் ஒருவனை அயலோர் பரிந்து கூறும் மன்னைக் காஞ்சியும்.

“இளையோர் சூடார், வளையோர் கொய்யார்,
 நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
 பாணன் சூடான், பாடினி யணியாள்,
 ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
 முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. ”

- புறம். 242

6.   இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் = இது செய்யத் தவிர்ந்தால் இன்னவாக முடியக்கடவது எனக் கூறும் ஒப்பற்ற சிறப்புடைய வஞ்சினக் காஞ்சியும்;

“மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
 தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
 தென்னொடு பொருது மென்ப; அவரை
 ஆரம ரலறத் தாக்கித் தேரோ
 டவர்ப்புறங் காணே னாயின், சிறந்த
 பேரம ருண்க ணிவளினும் பிரிக;
 அறநிலை திரியா வன்பி னவையத்துத்
 திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
 மெலிகோல் செய்தே னாகுக; மலிபுகழ்
 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
 பொய்யா யாணர் மையற் கோமான்
 மாவனு மன்னெயி லாந்தையு முரைசா
 லந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
 வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங்
 கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
 வின்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ?
 மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
 தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
 வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. ”

- புறம். 71