பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை253

7.   இன்னகை மனைவி பேஎய் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் = புண்பட்டோன் உளையாவாறு இனிய “வாயில் நகை” வாய்ந்துவரும் அவன் மனைவி அவனைப் பேய் நெருங்காமற் காத்துத் தொடவிடாத தொடாக்காஞ்சியும்;

“தீங்கனி யிரவமொடு வேம்பு மனைச்செரீஇ
 வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
 கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
 யையவி சிதறி யாம்ப லூதி
 யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி
 நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
 காக்கம் வம்மோ, காதலந் தோழி!
 வேந்துறு விழுமந் தாங்கிய
 பூம்பொறி யுடைய நெடுந்தகை புண்ணே. ”

- புறம். 281

8.   நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி ஆஞ்சியானும் = அவனுடலொடு தன்னையும் விட்டிறந்த கணவனை முடித்த வேலினால் அவன் மனைவி கண்டோ ரஞ்சுமாறு தன்னுயிரைப் போக்கிய ஆஞ்சிக்காஞ்சியும்;

“யானை தந்த முளிமர விறகிற்
 கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
 மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி
 மந்தி சீக்கு மணங்குடை முன்றிலி
 னீர்வார் கூந்த லிரும்புறந் தாழப்
 பேரஞர்க் கண்ணன் பெருங்காடு நோக்கித்
 தெருமரு மம்ம தானே தன்கொழுநன்
 முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச்
 சிறுநனி தமிய ளாயினும்
 இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே. ”

- புறம். 247

9.   நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பாலானும் = குடித்தொன்மையில் ஒவ்வா நிலையில் ஒத்தானாகக் கருதி மகள்கொள்ளப் படையொடு வந்த மன்னனொடு தொல்குடி மகளைப் படுத்தலஞ்சி, அதை விலக்க அவள் தன்னையர் வந்தவனோடு தம்முயிரைப் பொருட்படுத்தாது பொரும் மகட்பாற்காஞ்சியும்;