| 254 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“களிறணைப்பக் கலங்கின காஅ” எனவரும் அடை நெடுங்கல்லியார் புறப் பாட்டில், “வந்தோர் பலரே வம்ப வேந்தர் . . . . . . . . . . . . . . . . . மைய னோக்கிற் றையலை நயந்தோர்; அளியர் தாமே; யிவள்தன்னை மாரே; செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இனன் மறவர்த் தாயினும் மன்னோ என்னா வதுகொல் தானே பன்னெல் வேலிப் பணைநல் லூரே” - புறம். 345 “ஏர்பரந்த வயல்” என்னும் குன்றூர்கிழார் மகனார் புறப்பாட்டும், (புறம். 338) “கானக்காக்கை” என்னும் அரிசில் கிழார் பாட்டும் (புறம். 342) மகட்பாற் காஞ்சித்துறையை விளக்குதல் உணர்க. 10. கொண்டோன் தலையொடு, முலையும் முகனும் சேர்த்தி, முடிந்தநிலையொடு தொகைஇ, ஈரைந்தாகுமென்ப = இறந்த தன்கணவன் தலையைத் தன் மார்பினும் முகத்தினும் அணைத்து அவனோடு மனைவி தானும் மாய்ந்த முதுகாஞ்சியொடு கூட்டி விழுப்பவகைக் காஞ்சித்துறை பத்தாகும் என்பர் புறநூற்புலவர் ஒருசாரார். “. . . . . . . . . . . . . . . . . . . . என்றிவை சொல்லி யழுவாள் கணவன்றன் பொன்றுஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள, நின்றான் எழுந்து, நிறைமதி வாண்முகங் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற. ” - சிலப்பதி. காதை. 19, வரி. 60 - 63 இனி, விழுமவகைக் காஞ்சித்துறை பத்தும் கூறுகிறார். அவை வருமாறு: |