| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 255 |
11. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றமாய்ந்த பூசன் மயக்கத்தானும் = மிகுந்த புகழொடு பொருதுமடிந்த குரிசிலொருவனை வளைந்திரங்கும் சுற்றத்தார் அரற்றி ஓய்ந்த அழுகைக்குரலரவ மயக்கமாம் காஞ்சியும்; “இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி. ” - தகடூர் யாத்திரை “பாடுநர்க் கீத்த” என்னும் பொத்தியார் புறப்பாட்டும் இத்துறையே கூறும். 12. தாமே யேங்கிய தாங்கரும் பையுளும் = போரில் ஊறுபட்டு ஓய்ந்தோர் தாங்களே பொறுத்தற்கரிய வருத்தங்கொண்டு ஏங்கும் துன்பக் காஞ்சியும்; [பையுள் = துன்பம்] இதில் தாமே என்பதை மனைவியர்மேல் ஏற்றி வேறு பொருள் கூறுவாரும் உளர். அது பொருந்தாமை வெளிப்படை. “குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினு மாளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபத மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை யீன்ம ரோவிவ் வுலகத் தானே” - புறம். 74 13. கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் = கொழுநனொடு மாய்ந்த மனைவியின் மீச்செலவைக்கண்டு வழிச்செல்வோர் இரங்கிக் கூறும் மூதானந்தக் காஞ்சியும்; | (1) | . . . . . . . . கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே, தென்னவன் |
|