| 256 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி. ” சிலப்பதி. காதை. 20, வரி. 77 - 81 இதில், கண்ணகி காட்டிய சான்றால் தான் குற்றமற்ற கோவலனைக் கொல்வித்த தன்தவறுகண்டு நெடுஞ்செழியன் உயிர் துறக்க, அவன் பெருங்கோப்பெண்டும் அவனுக்குப் பின் இருக்கத் தரியாமல் உடன் உயிர்இழந்தது கூறும் மூதானந்தம் வருதல் காண்க. | (2) | “ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார்; போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கு முடனே யுலந்த துயிர். ” | | | - புற - பொரு - வெ - மா. |
14. நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனி மகள் புலம்பிய முதுபாலையும் = மிகப்பெரிய சுரத்திடைக் கொழுநனையிழந்து தனியளாய் மனைவி யரற்று முதுபாலைக் காஞ்சியும்; | (1) | “என்றிறத் தவலங் கொள்ள லினியே வல்லார் கண்ணி யிளையர் திளைப்ப நகாஅ லெனவந்த மாறே யெழாநெற் பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின் வளையில் வறுங்கை யோச்சிக் கிளையு ளொய்வலோ கூறுநின் னுரையே. ” | | | - புறம். 253 |
| (2) | “ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே, யணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்கவல்லேன்; என்போற் பெருவிதிர்ப் புறுக, நின்னை யின்னா துற்ற வறனில் கூற்றே; நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. ” | | | - புறம். 255 |
|