பக்கம் எண் :

258நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

(1) “அளிய தாமே சிறுவெள் ளாம்பல்,
இளைய மாகத் தழையா யினவே;
இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைக லுண்ணு
மல்லிப் படூஉம் புல்லா யினவே”
 - புறம். 248
(2) “குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசி
லிரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
யல்லி உணவின் மனைவியோ டினியே
புல்லென் றனையால், வளங்கெழு திருநகர்!
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டு
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே”
 - புறம். 250

18.   நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும் = மனைவி, இறந்த கணவனோடு ஈமமேறிப் பெருந்தீயிற் புகுவாள் இடைவிலக்குவார்க்குக் கூறும் பாலைக் காஞ்சியும்;

“பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
முயவற் பெண்டிரே மல்லே மாதோ.
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம
நுமக்கரி தாகுக தில்ல, வெமக்கெம்
பொருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பறு
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே. ”