| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 261 |
| சூத்திரம் : 25 | | | | பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. |
கருத்து : இது பாடாண் திணைக்கூறுகள் அகத்தில் கைக்கிளைத்திணைக்குப் புறனாகும் எனவும், பாடாண் திணை எட்டுவகைப்படும் எனவும் கூறுகிறது. பொருள் : இதன் பொருள் வெளிப்படை. குறிப்பு : புறத்திணைகள் ஏழனுள் முன்ஆறும் கூறி முடிந்ததனாலும், எஞ்சியபாடாண் ஒன்றே இதிற் கூறப்படுதலானும், பிறவற்றுள் ஒவ்வொன்றைப் பிரித்துக் கூறிய முன் சூத்திரங்களிற் போலத் “தானே” என்னும் பிரிநிலைச் சொற்குறிப்பு ஈண்டு வேண்டாதாயிற்று. புறனே . . . . . . உடைத்தே, என்பவற்றின் ஏகாரம் அசை. மற்றத்திணைகள் தனக்கொரு தனிநிலை பெறாமல் பிறதிணைகளை நிலைக்களனாகக் கொண்டு ஏற்றவிடத்தவை ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாய் அமையுமதனியல் கருதிப், “பாடாண் பகுதி” எனச் சுட்டப்பட்டது. வெட்சிப்பாடாண், வஞ்சிப் பாடாண், உழிஞைப்பாடாண், தும்பைப்பாடாண், வாகைப்பாடாண், காஞ்சிப்பாடாண், புரைதீர் காமம் புல்லிய பாடாண் என்றெழு வகையிற் பாடாண் பிறத்தலின், அவ்வத் திணைப்பகுதி நீக்கிப் புகழ்ச்சிக்குரிய ஒவ்வொரு பகுதியே பாடாணா மென்பது விளங்கப் பாடாண் என்னாமற் ‘பாடாண்பகுதி’ எனத் தெளிக்கப்பட்டது. பாடாண் வகை ஒவ்வொன்றினும் அத்திணைப்பகுதி பிரித்துப் பாடாண் பகுதியை ஆய்ந்தறிய வேண்டுதலின், “நாடுங் காலை” எனக் கூறிய குறிப்பும் தேர்தற்குரியது. நாலிரண் டெனக் குறிக்கப்பட்டவை, பாடாண்திணை வகைகள். அவற்றின் விளக்கம் பின் “கொடுப்போரேத்தி” எனும் சூத்திரத்தில் கூறுகிறார்; அதையடுத்துத் “தாவினல்லிசை” எனுஞ் சூத்திரத்தால் பாடாணின் துறைகளை விளக்குகிறார்; முன், உழிஞைக்கு முதலில் அதன் வகை கூறிய பிறகு அதன் துறைகளை விளக்கியது போலப் பாடாண் துறைகள் பின் எட்டிறந்தன கூறதலானும், அவற்றை இதில் எட்டெனச் சுட்டுத லமையா தாகலானும், இத்திணை வகை எட்டே பின் விரிப்பதானும், இதில் எட்டு எனுமெண் துறைத்தொகை யென |