| 262 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நச்சினார்க்கினியர் கொண்டது பொருந்தா தென்க. இனிப் புறத்திணை ஆறும், அன்பினைந்திணை. . . . . கைக்கிளையாம் அகத்திணைகள் இரண்டுமாகப் பாடாண் பிறக்கும் வகை எட்டெனினு மமையும். இனி, கைக்கிளையிற் காதற்சிறப்பு ஒருவர்க்கேயாவது போலப் பாடாண் சிறப்பும் பொதுமையின்றித் தகவுடையார் ஒருவருக்கே உரித்தாக வருதலானும், கைக்கிளையில் காதற் கூற்றுப் பாராட்டுந் தலைவன்மாட்டாவது போற் பாடாண் கூற்றும் புகழ்வோர்தம் பக்கலிலே யமைதலானும், இரண்டினுக்கும் நிலம் பொழுது வரையறை இன்மையானும், கைக்கிளையி லிழுக்கு நீக்கித் “தருக்கியவே” சொல்லி யின்புறுதல் போலப் பாடாணில் பழிதழுவாப் புகழ்மை யொன்றே பயில்வதானும் இருதிணையு மொருதலையாச் செந்திறமா யமைதலானும், பாடாண் கைக்கிளைக்குப் புறனாயிற்று. | சூத்திரம் : 26 | | | | அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்று மென்ப. |
கருத்து : இது, பாடாண் திணை இயல் விளக்குகிறது. பொருள் : அமரர்கண் முடியும் அறுவகையானும் = போர் மறவர் (அஃதாவது பொருநர்) பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சிமுதல் காஞ்சியீறான புறத்திணை வகையாறினும், (புரைதீர் காமம் புல்லிய வகையினும்) குற்றமற்ற அகப்பகுதியில் அன்பளைந்த காதல் திணைவகையினும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப = அவ்வெழுவகைத் திணைகளுள் இயல்பாக இதற்கேற்புடைய ஒவ்வொன்றின் கூறே பாடாணாய் அமையும் என்று கூறுவர் புறநூற்புலவர். குறிப்பு : தனிநிலை பெறாமல், பிறதிணைகளை நிலைக்களனாகக் கொண்டு, அவ்வவற்றில் புகழ்மைக்கேற்ற பகுதியே பாடாணா யியையுமென்பதை மேற் சூத்திரத்தில் “பாடாண் பகுதி” எனச்சுட்டி, இதில் அதன் தன்மை தெளிய விளக்கப்பட்டது. மேற்கூறி முடித்த ஆறு புறத்திணைப் பகுதிகளிலும், அகத்திணை வகைகளுள் புகழ்மையொடு |