பக்கம் எண் :

264நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இனி, இதற்கு உரைகாணும் நச்சினார்க்கினியர் கூறுவது: முதற்கண், “பாடாண்திணை தேவரும் மக்களும் என இருதிறத்தார்க்கே உரிய என்பார், இவ்விரண்டனுள் தேவர்பகுதியிவையென்பதுணர்த்துகிறது (இச்சூத்திரம்)” என்று இச்சூத்திரக்கருத்தை வரைந்து கொள்ளுகின்றனர். பின்னர்த், தாம் வரைந்துகொண்ட கருத்துடன் பொருந்த, “பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்துமுடியும் அறுமுறை வாழ்த்தின்கண்ணும், அத்தேவரிடத்தே உயர்ச்சிநீங்கிய பொருளைவேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக்கண்ணும், மேல் பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக்கொண்ட ஒன்றனுள் - தேவரும் மக்களும் எனப்பகுத்த இரண்டனுள் - தேவர்க்குரித்தாம் பகுதியெல்லாந்தொக்கு ஒருங்குவரும் என்று கூறுவார் ஆசிரியர்”, என்றவர் கூறினார். இதன் பிறகு தாம் கூறும் புதுப்பொருளைப் பொருத்திக்காட்ட வேண்டி விரிவுரையிற் பல வருவித்துக் கூறுவர். அவையிற்றுள் இங்குச்சில கூறுதும்.

அமரர்என தேவர் பரவப்படுதலேயன்றி, “முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடைவேந்தரும் உலகு”மாக ஆறும் பரவப்படுங்கால் அப்பராவு தேவர்கண்ணே வந்து முடியுமென்பர். அன்றியும் பராவப் பெறுந் தேவரல்லா இவ்வாறும் “சிறப்பு வகையால் அமரர் சாதிப்பால் என்றல் வேத முடிவு”‘என ஓரமைதி காட்டுவர். இனி, “புரைதீர் காமம் புல்லியவகை” என்பதில் புரையைக் குற்றமென்னாது அதற்கு மாறாய உயர்ச்சியெனக் கொண்டு, உயர்ந்த மறுமைப்பயனாம் வீடுபேறு வேண்டாமல் இழிந்த இம்மைப்பயன்களை விரும்பித் தேவர்ப் பராவுதலை ஆசிரியர் “புரைதீர் காமம் புல்லிய” தாகக் கூறினாரெனக் கொள்ள வைக்கின்றார், “ஒன்றன் பகுதி ஒன்றும்” என்றதற்கு “உரித்தாம் பகுதியெல்லாம் தொக்கு ஒருங்குவரும்” என்றுரை கூறுவர். இச்சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியர் கண்ட இப்பொருள் இளம்பூரணர் உரையோடு மாறுபடுவதுடன், தொல்காப்பியர் கருத்து ஆகாமையும் சிறிது சிந்திக்கத் தெளிவாகும்.

1.   முதலில், தாம் கருதிய “ஆறுவகை”யினை இந் நூலார் யாண்டு எவ்வாறு சுட்டினாரென்பதை இரண்டு உரைகாரருமே விளக்கினாரிலர். தாம் கூறக்கருதிய தொகைப்பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல், உரைப்பார் உரைக்கும் வகையெல்லாம் சென்று அமையச் சூத்திரிப்பது