பக்கம் எண் :

266நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பாம்பு, எலி, பருந்து, மயில், மாடு, ஆல், வேல், அரசு அனைத்தையும் நாளும் நம்மவர் வணங்கக் காண்கிறோம். இது நல்ல வழிபாடெனவே கருதப்படுகிறது. கீதையும் வேதமும் ‘எப்பொருளுந் தெய்வமாகும், எதன் வணக்கமும் தெய்வத்தின்பாற்சென்று முடியும்’ என விளக்கியிருக்க, பசு பார்ப்பாராதி ஆறு மட்டுமே வழுத்தற்குரியன வென்பது பொருந்தாதன்றே.

4.   இனி, வேதம் தமிழர் படிக்கொணாதாகவே, வேதமுடிவென உரைகாரர் கூறுவதெல்லாம் சரியெனத் தமிழ் கற்பார் கொள்ளவும், கொண்டு வாளா அமையவும் கடவரென நச்சினார்க்கினியர் கருதினர்போலும்! அவர் இங்குக் கூறிய அறுவகையினவே தேவர்க்காம் வணக்கம் பெறற்குரிய வென்று எந்த வேதம் எப்பகுதியிற் கூறியுள்ளது?இதற்குத் தெளிவான வேதவாசகங் காட்டும்வரை இதுவே வேதமுடிவென்பது துணியப்படாததாகும்.

இனி, ஆறு புறத்திணைகளினடியாகப் பிறக்கும் பாடாண் பகுதிகளுக்குச் செய்யுள் வருமாறு :

(1)  வெட்சிப்பாடாண் :

“முனைப்புலத்துக் கஃதுடை முந்நிரைபோல் வேந்தூர்
 முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - எனைப்புலத்துச்
 சென்றதுநின் சீர்த்தி தேர்வளவ! தெவ்வர்போல்
 நன்று முண்டாக நமக்கு”

- பழைய பாட்டு. நச் உரைமேற்கோள்.

“செருப்பிடைச் சிறுபரலன்னன்” எனும் புறப்பாட்டும் (257), “முட்காற்காரை” எனும் உலோச்சனார் புறப்பாட்டும் (புறம். 258), “நறவுந் தொடுமின்” எனும் பேராலவாயர் பாட்டும் (புறம். 262), “குயில்வாயன்ன” எனும் ஒளவை புறப்பாட்டும் (புறம். 268), வெட்சியின் வகையாம்.

(2)  வஞ்சிப்பாடாண் :

“வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்
 தேத்தினார்க் கீத்துமென் றெண்ணுமோ - பாத்தி