பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை267

யுடைக்கல மான்றேர் உடனீத்தான் ஈத்த
படைக்கலத்திற் சால பல”.

“காலனும் காலம் பார்க்கும்” எனும் கோவூர்கிழார் புறப்பாட்டும் (புறம். 41), “வல்லாராயினும்” எனும் காரிக்கண்ணனார் பாட்டும் (புறம். 57) வஞ்சிப்பாடாண் வகையாதலறிக.

(3)  உழிஞைப்பாடாண் :

“வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால்
 அஞ்சி யொதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ்
 வான்றோய் புரிசைப் பொறியு மடங்கினவால்
 ஆன்றோ ரடக்கம்போ லாங்கு. ”

- பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு. 1329

“இரும்பனை வெண்டோடு” எனும் கோவூர் கிழார் பாட்டும் (புறம். 45), “மணிதுணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி” எனும் மோசி சாத்தனார் பாட்டும் (புறம். 272), “நீரறவறியா” எனும் காமக்கண்ணியார் பாட்டும் (புறம். 271) உழிஞைப் பாடாணாதல் காண்க.

(4) தும்பைப்பாடாண் :

“இன்கடுங் கள்ளின் ஆமூ ராங்கண்
 மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
 ஒருகால் மார்பொதுங் கின்றே, ஒருகால்
 வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே,
 நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப்
 போரருந் தித்தன் காண்கதில் லம்ம;
 பசித்துப் பணைமுயலும் யானை போல
 இருதலை யொசிய வெற்றிக்
 களம்புகு மல்லற் கடந்தடு நிலையே. ”

- புறம். 80

“யாவி ராயினும் கூழை தார்கொண்
 டியாம்பொருது மென்ற லோம்புமின்; ஓங்குதிறல்
 ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
 கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்