| 268 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
விழவுமேம் பட்ட நற்போர் முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே” - புறம். 88 (5) வாகைப்பாடாண் : “நீர்மிகிற் சிறையு மில்லை; தீமிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலு மில்லை; வளிமிகின் வலியு மில்லை; ஒளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்; போரெதிர்ந்து கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே. அளியரோ அளியர்அவ னளியிழந் தோரே, நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த செம்புற் றீயல் போல ஒருபகல் வாழ்க்கைக் கலம்வரு வோரே” - புறம். 51 இன்னும், “இமிழ் கடல் வளைஇய” எனும் குடபுலவியனார் பாட்டும் (புறம். 19) வாகைப் பாடாண் பகுதியாம். “இரும்பனம் புடைய லீகை” எனும் பரணர் பாட்டும் (பதிற்று. 42), “வாங்கிரு மருப்பிற்றீந்தொடை” எனும் கபிலர் பாட்டும் (பதிற்று. 66) ஒழுகுவண்ணச் செந்துறைப் பாடாணாதலறிக. (6) காஞ்சிப் பாடாண் : “அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின் எந்தையு முடையே மெங் குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்க ளிவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தரெங் குன்றுங் கொண்டார், யாமெந்தையு மிலமே. ” - புறம். 112 இது, பாரியின் யாக்கைநிலையாமையும் செல்வநிலையாமையுங் கூறுதலிற் காஞ்சியாய்ப், பாரி புகழ் குறித்தமையாற் பாடாணுமாயிற்று. |