| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 269 |
“நோகோ யானே, தேய்கமா காலை, பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்? உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டல் மரீஇ யோனே. ” - புறம். 234 இன்னும், இவ்வெள்ளெருக்கிலையார் புறப் பாட்டில் வேள் எவ்வியின் கொடைவென்றி வேளாண்மையும் அவனிறந்தற்கிரங்கலு முடன்கூறலால், இது காஞ்சிப் பாடாணாயிற்று. (7) இனிப் புரைதீர் காமம் புல்லிய பாடாண், குற்றமற்ற கைக்கிளையினும் அன்பொத்த ஐந்திணை மருங்கினும் பிறக்கும். அதற்குச் செய்யுள்: (அ) கைக்கிளைப் பாடாண் வருமாறு: “பெண்மை யுணராப் பெதும்பை யெழில்நறவம் கண்வாய் மடுத்துக் களித்தவளை யண்மித்தன் உள்ளத் துறைந்தொளிரு மோவியநீ மண்ணில்நடை கொள்ளத் தகுமோ கொடுமையெனும் வள்ளலையச் செல்வி சிரித்துச் சிறகிலேன் நான்பறக்குங் கல்வியறி யேனிரண்டு காலுடையே னாதலினால் மெல்ல நடக்கின்றேன் வெகுள்வானே னென்னவன் கல்லா மழலைசெவிக் கண்டென்னும் எல்லாநின் பொல்லாப் புருவச் சிலைகுனித்துப் போர்விழியால் கொல்லா தருளிக் கொடுமைதவிர்த் தில்லோடென் நெஞ்சத்தை யாள நினையாயோ நீயல்லால் தஞ்சமிலேன் என்றிரக்குந் தன்கொடைமை எஞ்சாதான் அஞ்சொற் பொருளை யறியாதவள் மயங்க அஞ்சிப் பொறுக்கவென வல்லாந்து கெஞ்சும் உலகாளு மன்னன் உளமார்ந்த காதல் விலகாத வேளாண்மை வேட்டு”. (ஆ) இருவயினொத்த தூயகாதற் பாடாண்: “வையக மலர்ந்த” எனும் பெரும்குன்றூர்கிழாரின் பதிற்றுப்பத்து (88ஆம்) பாட்டில், |