| 276 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“. . . . . . . . . . . . . . . . . கண்ணொடு கண்ணினைக் கௌவி யொன்றையொன் றுண்ணவு நிலைபெறா துணர்வு மொன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். ”
“பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித் தொருவரை யொருவர்தம் உள்ள மீர்த்தலால் வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும் இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார். ”
“மருங்கிலா நங்கையும் வசையி லையனும் ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் றாயினார், கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ” ‘- கம்பர் இராமாவதாரம், மிதிலைக்காட்சி, செய்யுள். 35, 37, 38 இப் பாட்டுக்களில், திருமாலும் இலக்குமியும் பாற்கடலை விட்டுப் பிரிந்துலகில் வந்துகூடிக் காதலால் கலந்த தூயகாமப் பாடாண்பகுதி பீடுபெறுதலறிக. இனி, கடவுள் மானிடர் மருங்கு காதலித்த பாடாண் பகுதி, முருகவேள் குறவள்ளியை மணந்த கதையாலறிக. “. . . . . . . . . . . . . . . . . ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே” - முருகாற்றுப்படை, வரி. 100 - 102 | சூத்திரம் : 29 | | | | குழவி மருங்கினும் கிழவ தாகும். |
கருத்து : இது, புரைதீர்காமம் புல்லிய வகைத்தாய பாடாண் திணைப்பகுதி மிக்கிளஞ் சிறார்மாட்டும் சார்த்திப் பாடப்பெறுமென்று கூறுகிறது. பொருள் : குழவிமருங்கினும் = காமஞ்சாலாச் சிறாரிடத்தும்; கிழவதாகும் = புரைதீர்காமம் புல்லிய பாடாண் புலனெறி வழக்கிற் குரியதாகும். |