| 278 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
- கலி. 58 இதில், காமஞ்சாலாச் சிறுமிபாற் புரைதீர் காதல் கூர்ந்த தலைவன் அவள் இளமையும் உயிர் வௌவும் எழிலும் பாராட்டுதலால், இது காதற் பாடாணாயிற்று. இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருந்தாது. பிள்ளைத் தமிழ் போன்ற பிற்காலப் பிரபந்தப் பகுதிகளைக் குறிப்பதிச்சூத்திரம் என்பரவர். அது செய்யுளியலிலன்றி ஈண்டுக் கூறற்பாற்றன்மையானும், அத்தகைப் பிரபந்த வகைகள் தொல்காப்பியர் காலத்தின்மையானும், அது கருத்தன்மை வெளிப்படை. இளம் பூரணரவ்வாறு கொள்ளாமையறிக. | சூத்திரம் : 30 | | | | ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான. |
கருத்து : இது, பாடாண் திணையில் தலைமக்கள் ஊரும் உயர்குடிப்பிறப்பும் பாராட்டற்குரியன என விளக்குகிறது. பொருள் : ஊரொடு தோற்றமும் = தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப்பிறப்பும்; உரித்தெனமொழிப = பாடாண் திணையில் பாராட்டுக்குரிய எனக்கூறுவர் புறநூற் புலவர்; வழக்கொடு சிவணிய வகைமையான = அப்பாராட்டு புலனெறி வழக்கொடு பொருந்தும் பகுதிகளில். குறிப்பு : “ஒடு” இரண்டில் முன்னது எண் குறிக்கும். பின்னது மூன்றாம் வேற்றுமையுருபு. இதில், அடி இரண்டும் ஒரு சூத்திரமாயமைதல் பொருளடைவாற்றெளிவாகும். காலத்தால் முந்திய இளம்பூரணரும் அவ்வாறே கொள்ளுதலால், அதுவே பழையபாடமாவது தேற்றம். இவற்றைப் பிரித்திருவேறு நூற்பாக்களாக்கிப் பொருந்தாப் புதுப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். தனித்துத் தன்னளவில் பின்னடி முடிந்த பொருளுதவாமை வெளிப்படை. புறத்திணை அல்லது பாடாண் வகை யனைத்திற்கும் பொதுவான புறனடை |