| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 279 |
கூறுதல் கருத்தாயின், அவ்வகையனைத்துங் கூறியபின் னிறுதியிற் புறனடை கூறல் முறையாகும்; இன்னும் இதன் பின்னும் பாடாண்வகை கூறுவதால் ஈண்டிது பொதுப்புறனடையாகாது. அன்றியும், முதலடிக்கு இவர் கூறும் புதுப்பொருள் தமிழறமும் பழமரபும் அழியவரு மிழுக்காகும். “ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்குரித்து” எனக் கூசாது கூறுகிறார். பரத்தை ஒருத்தியே யன்றிப் பலரொடும் வாழ்வாரிருக்கலாம். அன்னாரும் அவ்வாழ்வை நாணாமல் ஊரறியக்காட்டி அதைப் பாராட்டும் உயரொழுக்கமாகக் கருதும் பேதைமைக்காளாகார். அவ்வளவு நாணற்ற கீழ்மக்கள் உளராயின், அவர் கயமையைப் பாடாண்திணைக்குரித்தெனப் புலவர் தலைவரான தொல்காப்பியர் கொள்ளார். அக்கயவர் வாழ்வு “வரைவிலா மாணிழையார் மென்தோள் அளறாழும் புரையிலாப் பூரியராம் திருநீக்கப்பட்டார் தொடர்பாக” வெறுக்கப்படுவதே தமிழறமரபாயிருக்க, அதைப் புலவர் புகழ்ந்துபாடும் பீடுசான்ற பாடாண்திணைப் பகுதியாக நச்சினார்க்கினியர் கூறத்துணிந்தது வியப்பாகும்; அத்துணிவு அவர் மதித்த ஒரு சில பிற்காலப் போலிப்புலவர் செய்யுட் போக்கையும், அவர்காலக் கயவர் சிலர் வாழ்க்கையையும் நோக்கியவர் கொண்டார் போலும். சொற்றொடர் சுட்டும் செம்பொருளை விலக்குதற்கு அவர் கூறும் ஏதுக்கள் போதாமையும் வெளிப்படை. அதையுமாராய்வோம். “இச் சூத்திரத்திற்குத் ‘தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பும்’ என்று பொருள் கூறின், (1) முன்னர் ‘வண்ணப் பகுதி’ என்பதனால் பிறப்புப் பெறுதலானும், (2) மரபியற் கண்ணே ‘ஊரும் பெயரும்’ என்னும் சூத்திரத்து ஊர் பெறுதலானும், இது கூறியது கூறலாமென்றுணர்க” இவ்விரண்டேதுக்களும் பொருளற்றன. (1) முதலில் “வண்ணப்பகுதி” என்பது செந்துறைப்பாட்டின் இன்னோசை வண்ண வகையைச் சுட்டுவதன்றி, ஒருவர் பிறந்த வருணவகை குறியாமை “வழங்கியல் மருங்கின்” எனு மேற்சூத்திரக் குறிப்புரையில் விளக்கப்பட்டது. ஆண்டது பாடாண் தலைமக்களின் குறப்பிறப்பைச் சுட்டாமை ஒருதலை. அன்றியும், ’வருணம்’ பொதுவாக ஆரியநூற் சாதியாவதன்றி, ஒருவரின் உயர் குடிப்பிறப்பாகாது. பாடாணாதற்குத் |