| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 281 |
“அணியிழையார்க் காரணங் காகிமற் றந்நோய் தணிமருந்துந் தாமேயா மென்ப - மணிமிடைபூண் இம்மென் முழவி னெயிற்பட்டின நாடன் செம்மல் சிலைபொருத தோள்” - சிறுபாணுரையீற்றுப் பழைய பாட்டு “கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேற் கூடலென்று - கூடல் இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து. ” - முத்தொள்ளாயிரம். 73 இனித்தோற்றம் அதாவது குடிப்பிறப்பினுயர்வுரித்தாகும் பாடாண் பாட்டு: “பிணிகிடந் தார்க்கும் பிறந்தநாட் போல அணியிழை யஞ்ச வருமால் - மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து” - முத்தொள்ளாயிரம். 95 “வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இனையளாய் மூத்திலள் கொல்லோ - தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கலென் பாள்” - முத்தொள்ளாயிரம். 77 இன்னும், “வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்காற் றொழுதேனைத் தோணலமுங் கொண்டான் - இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூச லினி” - முத்தொள்ளாயிரம். 54 எனவரும் காமப்பாடாண் வெண்பாவில், “கொற்கை” என்றூரும், “மாறன்” என்றுயர் குடிப்பிறப்பாந் தோற்றமும் ஒருங்குவருதலும் காண்க. |