பக்கம் எண் :

282நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சூத்திரம் : 31 
 மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.

கருத்து : இது, புரைதீர்காமப் பாடாண்பகுதியிற்றலைமக்கள் பெயருங் கூறப்பெறு மரபுண்மை சுட்டுகிறது.

பொருள் : மெய்ப்பெயர் = தலைமக்களின் உண்மைப் பெயரை; மருங்கில் வழியே வைத்தனர் = பாடாண் பகுதியில் நெறியாக அமைத்துக் கூறினர் புறநூற்புலவர்.

குறிப்பு : மருங்கு = பக்கம்; இங்கது பாடாண் பக்கம் குறிக்கும். அகத்திணைக்கு விலக்கப்பட்ட இயற்பெயர் காதற்பாடாண் புறத்திணையில் வருதல் புலனெறியாதலின், ‘வழியே வைத்தனர்’ என விளக்கப்பட்டது. ஈற்றேகாரம் அசை. “புறநூற் புலவர்” எனமெழுவாய் அவாய்நிலையாற் கொள்ளப்பட்டது.

மெய்ப் பெயர் குறித்தற் குரித்தாம் பாடாண் பாட்டு:

“நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப்
 படுமடும் பாம்பேர் மருங்குல் - இடுகொடி
 ஓடிய மார்ப னுயர்நல் லியக்கோடன்
 சூடிய கண்ணி சுடும்”

- சிறுபாணுரையீற்றுப் பழைய பாட்டு

சூத்திரம் : 32 
 கொடிநிலை காந்தள் வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

கருத்து : இது, திணைகள் மக்கள் ஒழுக்கங்குறித்தே வருமாயினும், பாடாண்வகையி லொருசில தலைமக்கள் பாராட்டுடன் கடவுட்பராவலும் தழுவிவருமரபு கூறுகிறது.

பொருள் : கொடிநிலை, காந்தள், வள்ளி என்ற = கொடிநிலை காந்தள் வள்ளி என்னும் பெயருடைய; வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் = போர்த்துவக்கமாம் வசையற்ற வெட்சியின் “மறங்கடைக் கூட்டிய” சிறப்பு வகை மூன்றை