பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை283

முதலாகக் கொண்டுவரும் பாடாண் பகுதி மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும் = கடவுட் பரவுதலுடன் பொருந்திவரும்.

குறிப்பு : ஈற்றேகாரம் அசை. பொதுவாகப் பாராட்டு நுதலும் பாடாணின் சிறப்புவகை மூன்று, கடவுள் வாழ்த்தைத் தழுவிவருதல் குறிக்கக் கடவுள் வாழ்த்துக்கு “ஒடு”க்கொடுத்துரைக்கப்பட்டது. போரைத் தொடங்குந் திணை வெட்சி; அதன் பொதுவகை ஆகோள்; சிறப்பு வகைகளுள் பாடாணாய்க் கடவுள் வாழ்த்துக் கண்ணுவன இதிற் குறித்த மூன்றுமேயாதலின், முற்றும்மை கூட்டப்பட்டது. இதிற் குறித்த மூன்றும் தம்மளவில் வெட்சி வகைகள். அவற்றை முதலாகக் கொண்டுவரும் பாடாண்பகுதி மூன்றே கடவுள் வாழ்த்தொடுவருமெனற்கு, “முதலன மூன்றும்” என்று கூறப்பட்டது. “அகரமுதல எழுத்தெல்லாம்” என்றதுபோல, கடவுள் கண்ணியபாடாண்வகை இதிற் குறித்த “மூன்று முதலன” எனக்கொள்க. “முதலன” ஈண்டுக் குறிப்பு வினை; “முதலாகவுடைய”, என விரியும்.

இனி, கொடிநிலை முதலிய மூன்றையு “முதலன” என்றது, அவை “அமர்கொள் மரபுத்திணை ஏழில் முதலாய வெட்சியில் போர்த்தொடக்க முதலில் நடைபெறுவன வாதலின், என்பாருமுளர்.

வெட்சி வகையாய் இதிற் குறித்த ‘கொடிநிலை’ முதலிய மூன்றும், அடுத்த சூத்திரம் கூறும் வஞ்சிவகைக் ‘கொற்றவள்ளை’ ஒன்றும், இங்கு முறையே அவ்வத்திணையடியாய்ப் பிறக்கும் பாடாண் வகையையே குறிக்கும் என்பதை இளம்பூரணர் நச்சினார்க்கினியரிருவரும் கூறுகின்றனர். ஆனால், இதன் முதலடியில், “கொடிநிலை கந்தழி வள்ளி” என்றிருவரும் பாடம் கொண்டு, கந்தழிக்கு வெவ்வேறு பொருள் கூறுவர். “கந்தழி” என்றொன்றை எத்திணைக்கும் துறையாகத் தொல்காப்பியர் கூறிலர்; யாண்டுமதை அவர் விளக்கவுமில்லை. பழைய சான்றோர் செய்யுட்களிலும் இப் பெயருடைய புறத்துறை எதுவும் பயிலாமையானும், இனைத்தென விளக்காதெதனையும் வாளா பெயரளவில் சுட்டி மயங்கவைப்பது தொல்காப்பியரியல்பன்றாதலானும், இதில் “கந்தழி” என்ற பாடம் பொருந்தாமை வெளிப்படை. அன்றியும், இதில் கடவுள் கண்ணிய பாடாணாய்