| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 285 |
| (1) | “புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக் கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங்
கொடுமரமுன் செல்லும் போலும்” | | | - சிலப்பதிகாரம் - வேட்டுவரி |
இதில், நிரைகருதிப் போதல் வெட்சியாதலும், அதற்குக் கொடியெடுத்து முன் செல்லுதல் “கொடிநிலை”யாதலும் காண்க. | (2) | “மாற்றார் நிரைகருதி மாறன் படைமறவர் கூற்றிற் கொதித்தெழுந்தார் கோமான்சீர் - போற்றிக் கயலுயர்த்திக் கொற்றவையைக் கைதொழுதார் தங்கோன் வியனுலகை வென்றாள்க வென்று. ” |
இதில், வெட்சிப் பாடாண் கடவுள் வாழ்த்தொடு மாறன் கயற் “கொடிநிலை தழுவிவருதலறிக. | (ii) | வெட்சிக் காந்தள் பாடாணாதற்குச் செய்யுள் : “வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீர் ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்களம்’; | | | -அகம். 98 |
இதில், வெட்சி வகைக் காந்தளில் முருகக் கடவுள் வாழ்த்து வருதலறிக. இன்னும், “கடம்பெறிந்து சூர்தடிந்த செவ்வேளின் கைவேல் மடம்பெரியள் சிற்றிடைச்சி வள்ளி - தடவிழிவேற் கஞ்சமகிழ் வோனைவெறி யாடி யயர்வோமால் பஞ்சவன்கோல் பாராள்க வென்று” எனும் வெண்பாவில், முருகக் கடவுள் வாழ்த்தோடு வெட்சி வகைக் காந்தள் பாண்டியரின் பாடாணாய் வருதல் காண்க. (iii) இனி, முருகனைப் பெண்டிர் பாடிப்பரவும் வெட்சிவகை வள்ளி பாடாணாதற்குச் செய்யுள் : “அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடுங் - குமரன்முன் |