பக்கம் எண் :

30நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பிரிந்துவரலும் பாலை யாதல் வேண்டும். இவ்வாறு யார் யாரைப் பிரிந்தாலும் பாலையென்று கொள்ளுதற்கு இலக்கண நூலிடந்தராது. அகத்திணைக ளனைத்தும் காதற்றலைமக்கள் தம்முள்நிகழும் அன்பொழுக்கம் பற்றியதேயாகுமன்றி, அவருள் ஒருவருக்கும் அயலவர்க்கும் இடைப்பட்ட ஒழுக்கத்தையும் தொடர்புகளையும் சுட்டமாட்டா. ஆதலானும், காலத்தால் வேறுபட்ட பிரிவிரண்டையும் இதற்குமுன் தனியிரண்டு சூத்திரங்களில் ஆசிரியர் விளக்கினாராகலானும், இச்சூத்திரத்தில் அவற்றையே இருவகைப் பிரிவு மெனத் தொகுத்துக்கூறி நிறுத்தினர் எனக்கொள்ளுதலே பொருத்தமாகும்.

1. வேனிற்பிரிவுக்குச் செய்யுள் மேலே “நடுவுநிலைத்திணையே” எனும் 9ஆம் சூத்திரத்தின்கீழ்க் காட்டிய “உறைதுறந்திருந்த” எனவரும் நற்றிணைப் பாட்டாலறிக.

இன்னும், பின்வரும் காவன்முல்லைப் பூதனார் பாட்டும் முதிர்வேனிற் பிரிவு கூறுதல் காண்க.

“அஞ்சி லோதி ஆய்வளை நெகிழ
 நேர்ந்துநம் அருளார், நீத்தோர்க் கஞ்சல்
 எஞ்சினம் வாழி, தோழி! எஞ்சாத்
 தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
 வேனி லோரிணர் தேனோ டூதி
 ஆராது பெயரும் தும்பி
 நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே”

(குறுந். 211)

இதில், “தீய்ந்த மராமரத்தின் ஓங்கிய கிளையில் உண்டான ஒரே பூங்கொத்திலும்கூடத் தேன் எனும் பெண்வண்டோடு தும்பி எனுமாண்வண்டு ஊதி அளைந்து தேடியும் உண்ணத் தேனின்றி மீளும்” எனலாலும், நீரின்மை சுட்டுதலாலும், பருவம் முதிர்வேனிலாதல் வெளிப்படை. அதில் தலைவன், தலைவியை அருளாதகன்று சுரனிறத்தலால், அவ்வேனில் பிரிவுப் பருவமாதலறிக.

2. இனி, வேனிற்பிரிந்தார் காரிற்கூடுதல் கீழ்வருஞ் செய்யுளிற் காண்க.

“விருந்தெவன் செய்கோ? தோழி! சாரல்
 அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச்