| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 31 |
சுரும்பிமி ரடுக்கம் புலம்பக் களிறட் டுரும்பி லுள்ளத் தரிமா வழங்கும் பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி மாக்கடல் முகந்து மணிநிறத் தருவித் தாழ்நீர் நனந்தலை யழுந்துபடப் பாஅய் மலையிமைப் பதுபோல் மின்னிச் சிலைவல் லேற்றொடு-செறிந்தவிம் மழைக்கே” (நற். 112) இன்னும், “இலையில் பிடவம் ஈர்மல ரரும்ப” எனும் பெருங் கண்ணனார் நற்றிணைப் பாட்டிலும், இத்துறை வருதலறிக. “கார்தொடங் கின்றே காலை; வல்விரைந்து செல்க, பாக!நின் தேரே. உவக்காண், கழிப்பெயர் களரிற் போகிய மடமான் விழிக்கட் பேதையொ டினனிரிந் தோடக் காமர் நெஞ்சமொ டகலாத் தேடூஉ நின்ற இரலை யேறே” (நற். 242) இன்னும், “உலகிற் காணி யாகப் பலர்தொழப் பலவயி னிலைஇய குன்றிற் கோடுதோ றேயினை உரைஇயரோ, பெருங்கலி எழிலி! படுமலை நின்ற நல்யாழ் வடிநரம் பெழீஇ யன்ன உறையினை; முழவின் மண்ணார் கண்ணி னிம்மென இமிரும் வணர்ந்தொலி கூந்தன் மாஅ யோளொடு புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர் விரவு மலருதிர வீசி இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே” (நற். 139) எனும் பெருங் கௌசிகனார் பாட்டும் முதுவேனிற் பிரிந்தார் காரிற்கூடி யின்புறலை விளக்கும் பரிசு களித்தற்குரியது. 3. இனி, பின்பனிப் பிரிவுக்குப் பாட்டு: “அம்ம வாழி தோழி! காதலர், நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் |