பக்கம் எண் :

32நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குவவே”

(குறுந். 104)

“அம்ம வாழி தோழி! முன்னின்று
 பனிக்கடுங் குரையம் செல்லா தீமெனச்
 சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
 நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே”

(குறுந். 350)

4. பனியிற்பிரிவார் இளவேனில் கூடுவதற்குச் செய்யுள்:

“. . . . . . . . . . . . . . . . .
 ஆற்றறல் நுணங்கிய நாட்பத வேனி
 விணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும்
நவ்வயி னினையும் நெஞ்சமொடு கைமிகக்
கேட்டொறுங் கலுழுமால் பெரிதே
. . . . . . . . . . . . . . . . . .
நுண்பஃ றித்தி மாஅ யோளே”

(நற். 157)

இன்னும்,

“அன்பினர், மன்னும் பெரியர். . . . . . . . . .
 . . . . . . . . . . . . . .
 செங்க ணிருங்குயில் எதிர்குரல் பயிற்றும்
 இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயிற்
 பிரியல மென்று தெளித்தோர் தேஎத்
 தினியெவன் மொழிகோ யானே. . . . .
 வெம்முனை அருஞ்சுர முன்னி யோர்க்கே”

(நற். 224)

எனவருமிப் பெருங்கடுங்கோ பாட்டும், “ஈங்கே வருவர்; இனையல்” எனும் கச்சிப்பேட்டு நன்னாகையார் குறும்பாட்டும் இத்துறையையே விளக்குதல் காண்க.

சூத்திரம் : 12 
 திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே;
நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரே.