தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 313 |
விளையாட்டெனக் கொண்டனர். அதனாற் பிறமொழிக் கூத்தியற் கொள்கைகளை இதிற்புகுத்தி இடர்ப்படலாயினர். இன்னும், அகப்புறப் பொருட்டுறை யனைத்திற்குமுரிய இயற்றமிழ்ச் சான்றோர் செய்யுளுறுப்பாவன மெய்ப்பாடென்பதை மறந்து, அவை “நாடகமகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்” எனப் பேராசிரியரும், ‘ஈண்டுச்சொல்லப்படுகின்ற பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையால் “பண்ணைத் தோன்றிய” என்றார்’ என இளம்பூரணரும், மயங்கக் கூறினர். மேலும், உரைகாரர் கூறும் ஆரியக் கூத்து நூற்குறிப்புக்களே தொல்காப்பியர் இதில் கூறக் கருதின், அவற்றை எனைத்தளவும் குறியாமல் வாளா “எண்ணான்கு பொருளும் நானான் கென்ப” எனக் குன்றக்கூறிக் கற்பவர் பொருளறியாமல் மயங்க வைப்பாரா? அன்றியும், இவையெல்லாம் ஆரியக்கூத்து நூலார் கோள்களாதலின் அவை இயற்றமிழ் நூலில் இடம் பெறற்கில்லை. அதுவுமின்றி, இந்நூலில் யாண்டும் எனைத்தளவும் கட்டாமலே, அயன்மொழிப் பிறநூற் குறிப்புக்களை அறிந்தன்றிக் கற்பவர் பொருளறியாவாறு தடுமாற இவ்வியற்றமிழ்ச் சூத்திரம் இயற்றப்பட்ட தெனல் மருட்கையை விளைப்பதாகும். “சூத்திரந் தானே ஆடி நிழலி லறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே” எனத் தெளித்த தொல்காப்பியர் தாமே இச்சூத்திரத்தைப் பேராசிரியர் இளம்பூரணர் எனும் இருவரின் விரிவுரை கொண்டும் விளங்காமல் மயங்குமாறு யாத்துவைத்தாரென்பது பொருந்தாது. இதுவுமன்றி, இவ்வுரைகாரர் கூறும் ஆரிய நாடக நூற்சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா. இதனைப் பின் மெய்ப்பாட்டு வகை விளக்கும் சூத்திரத்தின் கீழ் விரித்துக் காட்டுதும். இனி, ‘எண்ணான்கு பொருளும்’ பின் “எள்ளல் முதல் விளையாட்டீறாக வரும் முப்பத்திரண்டுமாம்” எனக் கண்டுகூறும் |