பக்கம் எண் :

320நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இதில் ‘என்று’ என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல்; “என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்றுவழியுடைய எண்ணினுட் பிரிந்தே” என்பது இடையியற் சூத்திரம்.

சூத்திரம் : 5 
 இளிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே.

கருத்து : இஃது, அழுகை எனு மவலவகை நான்கும் அவற்றி னினப்பொதுவியல்பும் உணர்த்துகிறது.

பொருள் : இளிவு = இழிதகவு; இழவு = இழத்தல்; அசைவு = தள்ளாத் தளர்வு; அஃதாவது கையறவு; வறுமை = மிடி, அஃதாவது இல்லாமை; என விளிவில் கொள்கை அழுகை நான்கே = என்று, ஒழியா தலமரச் செய்யு மவலம் இந்நால்வகைத்தாம்.

குறிப்பு : ஈண்டு, இளிவு = பிறரிகழ்வாற் பிறக்குமவலம்; பழி பிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று. அவ் இளிவரலை அடுத்த சூத்திரம் கூறும். ஈண்டு இளிவுக்கு இதுவே பொருளாதல், இங்கு “இழிவே” எனக் கொண்ட பழம் பாடத்தானும் வலியுறும்.

“நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே” (குறுந். 169)

“இம் மகனல்லான் பெற்ற மகன்” (கலி. 86)

“பன்மாயக் கள்வன்” (குறள். 1258)
“தீரத் தறைந்த தலையும்தன் கம்பலும்
 காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம்
 சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானை” (கலி. 65)

இவை அகத்தில் ‘இளிவு’ குறிப்பன.

“மக்களே போல்வர் கயவர்” (குறள். 1071)

“தேவரனையர் கயவர்” (குறள். 1073)

இவை போல்வன புறத்தில் இளிவு குறிப்பன.