பக்கம் எண் :

322நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“குப்பைக் கோழித் தனிப்போர் போல
 விளிவாங்கு விளியி னல்லது
 களைவோ ரிலையா னுற்ற நோயே”

(குறுந். 305)

“இது மற் றெவனோ தோழி! துனியிடை
 இன்ன ரென்னு மின்னாக் கிளவி?
 . . . . . . . . . . . . . . .
 திருமனைப் பலகடம் பூண்ட
 பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே”

(குறுந். 181)

இன்ன பலவும் அகத்தில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை பற்றிய இளிவரல் குறிப்பன.

“தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
 கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
 மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
 தாமிரந் துண்ணு மளவை
 ஈன்ம ரோஇவ் வுலகத் தானே”

(புறம். 74)


“தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
 நிலையி னிழிந்தக் கடை”

(குறள். 964)

“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
 பீடழிய வந்த விடத்து”

(குறள். 968)

இன்னபலவும் புறத்தில் இளிவரல் கூறுவன காண்க.

இனி, மூப்பு முதல் மென்மை வரை ஒவ்வொன்றும் தன்னளவில் வாழ்வொல்லாத் தாழ்வு தொடரும் தனஅமைத்தாதலின், அப்பொது வியல்பு விளங்க இவை “யாப்புறவந்த இளிவரல் நான்கு” எனப்பட்டன.

ஏகாரம், முதலிரண்டும் எண்குறிக்கும். ஈற்றதசை, தேற்றமெனிது மிழுக்காது. “மென்மையொடு” என்பதன் ‘ஒடு’ பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச் சொல்.