பக்கம் எண் :

324நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

கருத்து : இஃது, அச்சவகை நான்கும் அவற்றினியல்பும் உணர்த்துகிறது.

பொருள் : வெளிப்படை; கூறாமலே விளங்கும்.

குறிப்பு : காட்சியளவில் காரணங்காணொணாவிடத்துக் கடவுள்மேல் ஏற்றிக்கூறு முலகியலில், துன்புறுத்தும் சூர் அதாவது இயவுளாக் கொள்வதை அணங்கென்பது பழ வழக்கு. கள்வர், அலைத்துப்பொருள் வௌவுவோர். ‘இறை’ குற்றங் கடிந்தொறுக்கும் வேந்து. குடிக்குற்றம் ஒறுத்தோங்கும் அறம் பிறர்க்கின்மையின் மிறைகடியும் ஒறுப்பச்சம் தரும் வேந்தைத் “தம்மிறை” எனச் சுட்டிய பெற்றியறிக. அச்ச ஏதுவாம் தம் மிறையை (தவற்றை)யும், அதற்குரிய ஒறுப்பாலச்சுறுத்தும் தம் இறையையும், ஒருங்கே “தம்மிறை” எனச் சுருக்கி இரட்டுற விளக்கிய செவ்வியுணர்க.

இனி, பிணங்கல் = மாறுபடல்; நெருங்குதலுமாம். காரணத்தோடு மாறுபடுவதோ நெருங்குவதோ கூடுவதெதுவும் அஞ்சப்படாதாதலின், “பிணங்கல் சாலா அச்சம் நான்கே” என்றிந்நான்கன் பொதுவியல் விளக்கப்பெற்றது. எனவும், ஏகாரங்களுள் முன்னவையும் எண்குறிக்கும்; ஈற்றேகாரம் தேற்றம், அசையுமாம்.

சூத்திரம் : 9 
 கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.

கருத்து : இது, பெருமித வகையும் இயல்பும் கூறுகிறது.

பொருள் : கல்வி முதல் கொடை யீறாக நான்கும் புகழத்தக்க பெருமித வகையாம்.

குறிப்பு : பெருமிதம், வெறுப்புக்குரிய செருக்கன்று; வீறு தரும் தருக்காகும்; எனவே, புகழ்க்குரிய பெருமையிற் பிறக்கும் மகிழ்வாம். இதன் பழியில் பெருமைப் பெற்றி தோன்றச் “சொல்லப்பட்ட பெருமிதம்” என விளக்கப்பட்டது. ‘சொல்’ புகழாதல் வெளிப்படை. ஆகையால் கல்வி, ஆண்மை அதாவது செம்மற்றிறல், சீர்த்தி, வள்ளன்மை என்பவை மீக்கூறப்பெற்றுப்