| 326 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பொருள் : செல்வம் = திரு அல்லது ஆக்கப் பெருக்கம்; புலன் = அறிவிலூறும் அகமலர்ச்சி; புணர்வு = கற்புறுகாதற் கூட்டம்; விளையாட்டு = தீதில் பொய்தல்; என்று அல்லல் நீத்த உவகை நான்கே = இந்நான்கும் அலக்கண் விலக்கிய மகிழ்ச்சி வகையாகும். குறிப்பு : செல்வம், அகமகிழ்விக்கும் ஆக்கப் பொதுப்பெயர். யாண்டும் எனைத்தளவும் உளமுளைய வருவதெதுவும் உவகைப் பொருளாகாது. புலன் ஈண்டுக் கல்விப் பயனாமறிவைக் குறிக்கும். அரிய புதிய ஆய்ந்து நுட்பமுணர்ந் துண்மகிழ்தற் கேதுவாமறிவு ஈண்டுக் குறிக்கப்பட்டது. நிறைந்த கல்வி உதவும் புகழ்க்குரிய முன்குறித்த பெருமித உணர்வின் உள்ளூறு மறிவின்பம் வேறாதலின், அவ்வறிவின்பம் இங்குப் “புலனுவகை” எனக் கூறப்பட்டது. இதனை உரனொடு முரணும் உணர்வு வகையாம் ஐம்பொறி நுகர்வென இளம்பூரணர் கூறுவராலெனின், பொறிவாயிலைந்தும் அவித் தடக்கற் பாலவென வெறுக்கப்பெறுதலானும், அவற்றில் அல்லல் நீத்தல் கூடாமையானும், அது பொருளன்மையறிக. அன்றியும், மெய்ப்பாட்டு வகை அனைத்துமே பொறிவழிப்படும் உணர்வுகளாதலின், அவற்றிலொன்றை மட்டும் பொறிநுகர்வெனக் கூறுதல் பொருந்தாமையானும், அது கருத்தன்மை தேறப்படும். இனி, புணர்வு அன்பொடு புணர்ந்த இன்பத்திணை ஐந்தில் இருவயினொத்த கற்புறு காதற்கூட்டமாம். தேறுதலொழிந்த தீதுறு காமக்களி எஞ்ஞான்றும் “பகை, பாவம், அச்சம், பழி என நான்கு மிகவாவாம்”; ஆதலின், அஃது அல்லல் நீத்த உவகைப் பொருளாகாமை ஒருதலை. அதனாலீண்டுப் புணர்வு பழிபடு மிழிகாமச் சுவை கருதாது, கற்புறு காதற் கூட்டத்தையே சுட்டுவதாகும். விளையாட்டு மக்கள் உளங்களித்தாடும் தீதறியாப் பொய்தல், அதாவது ஓரைவகை அனைத்தையும் குறிக்கும். அஃது இருபாலார்க்கும் ஏற்பதாகும். ஆண்மையழிந்து மகளிரை இழிக்கும் பிற்காலத்தில் விளையாட்டை அவருக்குத் தனி உரிமையாக்கி, விளையாட்டுப் பொதுப் பெயர்க்கெல்லாமம் மகளிர் விளையாட்டெனப் புதுப் பொருளும் கொள்ளப்பட்டது. கடலாடல், புதுப்புனல் குடைதல், உண்டாட்டு, தீதுதவாக் கூத்துப்போல்வன வெல்லாம் விளையாட்டு வகையாகும். எனில், பீழையுதவு மெதுவும் அழுகை. . . இளிவரல் முதலிய உணர்வின் |